;
Athirady Tamil News

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் வவுனியாவில் நடமாடும் சேவை

0

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12) இடம்பெற்றது.

மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இந் நடமாடும் சேவையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைத்தல், காலம் கடந்த பிறப்பு இறப்பு பதிவு, மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள், ஜனாதிபதி செயலகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள், ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள், போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு உட்பட பொது மக்களுக்கான பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உத்தியோகபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார். குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.