;
Athirady Tamil News

20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை..!

0

உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகமான பனிப்பாறைகளை இமயமலை கடந்த 20 வருடமாக இழந்து வருவதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இமயமலை இயற்கையின் அருட்கொடைகளில், ஒன்று என்று கூட சொல்லலாம். அபப்டிப்பட்ட இந்த இமயமலையில் ஏராளமான பனிப்பாறைகள் உள்ளன. மேலும் இந்த பனிப்பாறைகள் மூலமாகத்தான் கோடானக்கோடி மக்கள் குடிநீர் ஆதாரங்களை பெற்று வருகின்றனர். ஆனால் உலக வெப்பமயமாதலால் இந்த பனிப்பாறைகள் வேகமாக, அதுவும் இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக, இமயமலையில் பனிப்பாறைகளின் அதிகபடியான இழப்பை ஆவணப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, இங்கிலாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமி, ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், 2000 முதல் 2020 வரை, இப்பகுதியில் உள்ள ப்ரோக்லேசியல் ஏரிகள் எண்ணிக்கையில் 47 சதவீதமும், பரப்பளவில் 33 சதவீதமும், அளவு 42 சதவீதமும் அதிகரித்தன.

இதனால் நிலப்பரப்பின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள பனிப்பாறைகள் அதிகபடியாக உருகி வருவதாகவும், இது சுமார் 57 கோடி யானைகளின் எடைக்கு சமம் அதாவது உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகம் என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய இமயமலையில் மிகப்பெரிய அளவில் உருகிவரும் பனிப்பாறைகள் குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு பனிப்பாறை உருகுவதால், அருகிலுள்ள ஏரியில் நீர்வரத்து மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீருக்கடியில் நிகழும் பனிப்பாறை மாற்றங்களை செயற்கைக்கோள்களால் காண இயலாமல், குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. ஏனென்றால் பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவு மூலம் ஏரி நீரின் மேற்பரப்பை மட்டுமே அளவிட முடியும். ஆனால் நீருக்கடியில் உள்ள பனியை தண்ணீரால் மாற்ற முடியாது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவிக்கையில், பனிப்பாறை-நீரியல் மாதிரிகளுக்கு முக்கியமான தரவுகளை வழங்குவதாகவும், மலைப்பகுதியில் நீர் வள மேலாண்மைக்கு ஆதரவளிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.