;
Athirady Tamil News

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் இம்முறை குறைந்தளவான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்

0
video link-

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு குறைந்தளவான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தை அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன இவ்வாறான மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிரந்ததை காண முடிந்தது.

நத்தார் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்முரமாக விற்பனையாகிய போதிலும் இம்முறை கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு வியாபாரம் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்வர்.ஆயினும் அண்மையில் ஏற்பட்ட டிக்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனைகள் மாத்திரம் இடம்பெற்றதுடன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் தவிர்க்கப்பட்டிரந்தன.

அத்தடன் வழமை போன்று நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அத்துடன் தேவாலயத்தை சுற்றி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக வழிபாடுகளில் பங்கு கொண்டிருந்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன. இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.