;
Athirady Tamil News

பெங்களூர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ரூ.64 லட்சம் கட்டணம்!!

0

கர்நாடக மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில் கல்லூரிகள் இப்போதே அட்மிசனை தொடங்கிவிட்டன. பெங்களூரில் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கான கட்டணம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியின் இணையதளம், சிஎஸ் மற்றும் இன்ஜினியரிங் படிப்பிற்கான மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக் கட்டணம் ரூ.10 லட்சம் எனக் குறிப்பிட்டு உள்ளது. இங்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் ஒரு மாணவருக்கு ரூ.64 லட்சம் கட்டணத்தில் சீட் ஒதுக்கபப்ட்டு உள்ளது. தகவல் அறிவியல் மற்றும் பொறியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (தரவு அறிவியல்), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (இன்டர்நெட் ஆப் திங்ஸ் & சைபர் செக்யூரிட்டி, பிளாக்செயின் தொழில்நுட்பம் உட்பட) ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், கணிதம், வேதியியல்,கணினி அறிவியல்,எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் பிளஸ்-2 வகுப்பில் சராசரியாக 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தகுதியானவர்கள். பல கல்லூரிகளில், அதே பாடங்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை. இதுபற்றி தனியார் அகடமி இயக்குனர் அலி க்வாஜா கூறுகையில், “மாணவர்கள் கணினி அறிவியலில் பட்டம் பெற வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். பெற்றோர்கள் சி.எஸ். சீட் மூலம் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். எவ்வளவு பெரிய தொகையை செலுத்த தயாராக உள்ளனர் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.