;
Athirady Tamil News

வடமராட்சி கிழக்கு கடலில் விபரீதம்: அலையோடு அடித்துச் செல்லப்பட்ட 27 வயது இளைஞன்

0

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார்.

நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.

கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார்.

இளைஞனுடன் நீராடிய மேலும் இருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து மருதங்கேணி பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.