;
Athirady Tamil News

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

0

கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் நேற்று (19) மாலை சந்தேக நபர் கைதானார்.

பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சந்தேக நபர் வசம் இருந்து 860 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.