வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிரடி அறிக்கை
இன்று இரவும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாலவெல பகுதியில் பெலியாத்த – ஹக்மன வீதி தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதற்கிடையில், பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.