;
Athirady Tamil News

விக்டோரிய காவல்துறையில் பணியாற்றும் தமிழ்ப்பெண் ; விதுஷாவின் பயணம்

0

அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரைச் சேர்ந்த தமிழ்ப்பெண் விதுஷா துஷ்யந்தன், விக்டோரிய காவல்துறையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

காவல்துறையில் இணைந்து தனது தொழில்முறைப் பயணத்தை முன்னெடுத்துவரும் விதுஷாவின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் காவல்துறைப் பணியில் அவர் பெற்றுள்ள அனுபவங்கள் குறித்து சிறப்பு உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலில் விதுஷா துஷ்யந்தனுடன் றேனுகா துரைசிங்கம் கலந்துரையாடுகிறார்.

விக்டோரிய காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தியும் இந்நிகழ்வில் பங்கேற்று தனது கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

காவல்துறையில் இணைந்து பணியாற்றுவதற்கான ஆர்வம், அந்தத் துறையைத் தெரிவுசெய்ததற்கான காரணங்கள், பணியின்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்ற விரும்பும் இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல்கள் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு இந்த உரையாடல் அமைந்துள்ளது.

பன்முகக் கலாசாரச் சூழலில் இயங்கும் விக்டோரிய காவல்துறையில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும், இளைய தலைமுறையினர் காவல்துறை உள்ளிட்ட பொதுச் சேவைத் துறைகளில் தமது தொழில்முறை எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள இந்த உரையாடல் வழிவகுக்கிறது.

விதுஷா துஷ்யந்தனின் காவல்துறைப் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் இந்தச் சந்திப்பு, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளையோருக்கு ஊக்கமளிக்கும் அனுபவப் பகிர்வாக அமைகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.