மண்மேடு சரிந்ததில் ரயில் சேவைகள் பாதிப்பு
கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (17) சனிக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால், பொல்கஹவலையிலிருந்து கம்பளை வரையிலும் கம்பளையிலிருந்து கோட்டை வரையிலும் பயணிக்கும் ரயில்களின் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையத் தொடர்ந்து இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த பகுதியில் சரிந்து விழுந்த பெருமளவிலான மண் அகற்றப்பட்டுள்ள போதிலும், ரயில் பாதையில் காணப்படும் எஞ்சிய மண்ணை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.