;
Athirady Tamil News

கர்நாடகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு மத்தியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் பீதர், கலபுரகி, யாதகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, சிவமொக்கா, மைசூரு, துமகூரு மாவட்டங்களில் சாரல் மழையும், பெங்களூரு, ஹாசன், கோலார் மாவட்டங்களில் வருகிற 30-ந் தேதி வரை மழை பெய்யும். எனவே இந்த மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.