;
Athirady Tamil News

கோர விபத்தில் தாயும் குழந்தையும் பரிதாப உயிரிழப்பு

0

அம்பாறை தெஹியத்தகண்டிய – முவகம்மன வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 33 வயதுடைய தாயும் 02 வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.