பணம் பறிக்கும் குழுவால் அச்சத்தில் மாணவர்கள்; நடப்பது என்ன?
குருநாகலில் மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் மாணவர் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிப்பு
கைதானவர்கள் கல்கமுவ, தம்புள்ள, அலவ்வ, கிரியுல்ல மற்றும் குளியாபிட்டிய போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து குருநாகலுக்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தி மிரட்டி, அவர்களிடமிருந்து நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது.
குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகேவுக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சிவில் உடையில் இருந்த பொலிஸாரினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை இதற்கு முன்னதாக, குருநாகல் வெவ வட்டத்திற்கு வருகை தரும் இளம் காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் இளைஞர் கும்பலைச் சேர்ந்த ஒரு குழுவும் இதே முறையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.