பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சியில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் பலுசிஸ்தானின் சோன்மியானியில் 12 கி.மீ ஆழத்திலும், கராச்சியிலிருந்து சுமார் 87 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. சோன்மியானி ஒரு கடற்கரை கிராமம் ஆகும். இது கராச்சியில் இருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
முன்னதாக திங்கள்கிழமை சிபி நகரம் மற்றும் பலுசிஸ்தானின் அருகிலுள்ள பகுதிகளில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கராச்சியில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.