;
Athirady Tamil News

54 வயதில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவன்..! !

0

பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்க 54 வருடங்கள் செலவழித்த மாணவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

71 வயதாகும் ஆர்தர் ரோஸ் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க 54 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். ஆர்தர் ரோஸ், அதிக காலம் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.

1969 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் பட்டம் பெற பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நுழைந்து இரண்டாம் ஆண்டில் நாடகம் மற்றும் நாடகக் கலைக்கு மாறினார்.

நடிப்புப் பள்ளியில் சேர்ந்து, தொலைதூரக் கல்வி மற்றும் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.

பின்னர் நடிப்பதில் சோர்வடைந்து, டொராண்டோ சட்டக்கல்லூரியில் சேர்ந்து, சட்டப் பட்டம் பெற்ற பிறகு 35 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, அவர் தனது பட்டப்படிப்பை நிறைவுச் செய்வதற்காக புதிய மாணவர் எண்ணைப் பெற்று 2017 இல் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மாணவராக உள்நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.