;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் ‘அத்தம’ தேசிய தூய்மை தின சிரமதானப் பணிகள் விமரிசையாக ஆரம்பம்!

0
அத்தம எனப்படும் தேசிய தூய்மை தினத்தின் யாழ் மாவட்ட நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பித்து கச்சேரி நல்லூர் வீதி ஊடாக
வீதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சிரமதான பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் தலைமை வகித்ததுடன் பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், முப்படையினர், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள், சாரணப் படையணியினர், தன்னார்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுதல் மற்றும் தூய்மையான சமூகத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.