ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவுங்கள்: ஐரோப்பிய உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்!!
மால்டோவா: மால்டோவாவில் நடைபெற்ற ஐரோப்பிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக உதவும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். மால்டோவாவில் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை தவிர துருக்கி, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, செர்பியா, ஆர்மீனியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவும், உதவியும் தரும்படி கோரிக்கை விடுத்தார். துருக்கிக்கு நேட்டோ அழுத்தம்: நேட்டோவில் ஸ்வீடன் இணைய துருக்கி, ஹங்கேரி நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்வீடனுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதை கைவிடுமாறு துருக்கியை நேட்டோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.