அமெரிக்காவில் இந்திய பெண் கொலை ; தமிழகத்திற்கு தப்பி வந்து பதுங்கிய முன்னாள் காதலன்
அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.
கத்திக்குத்து காயங்கள்
இந்நிலையில் நிகிதாவைத் தானே கொலை செய்துவிட்டு, டிசம்பர் 31 முதல் காணாமல் போய்விட்டதாக அவரது முன்னாள் காதலன் பொலிஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த உடனே சந்தேகம் வராத வகையில் அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.
விசாரணையில், ஜனவரி 3-ம் திகதி அன்று அவரது முன்னாள் காதலனின் குடியிருப்பில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
முன்னாள் காதலனே பெண்ணை கடுமையாக தாக்கி, பல்வேறு முறை கத்தியால் குத்திக் கொன்றதாக பொலிஸார் கண்டறிந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுன் சர்மாவை டிராக் செய்து இன்டர்போல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.