;
Athirady Tamil News

உயரதிகாரிகளை மிரளவிட்ட வைத்தியரின் மகள் ; நீதிமன்றின் உத்தரவு

0

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
சந்தேகநபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தான் “குற்றவாளி அல்ல” என பிரதிவாதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.