திருகோணமலையில் கரையொதுங்கிய உயிரிழந்த டொல்பின்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் பின்னர் மீனவர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பினை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



