;
Athirady Tamil News

வெனிசுவேலா அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல்? கடும் துப்பாக்கிச் சூட்டால் மீண்டும் பதற்றம்!

0

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார்.

வெனிசுவேலாவுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு நுழைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படையினர், கைது செய்த அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோவும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோரஸையும் நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (ஜன.5) ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில், வெனிசுவேலாவை அமெரிக்காவை நிர்வகிக்கும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், நேற்று மாலை மிராஃப்ளோரஸ் அதிபர் மாளிகை அருகே அதிகளவிலான ட்ரோன்கள் பறந்து வந்ததால் மீண்டும் பதற்றம் உருவாகியது.

திங்கள்கிழமை மாலை மிராஃப்ளோரஸ் அரண்மனையின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் உருவானது. இதனால், பாதுகாப்புப் படையினர் ட்ரோன்களை நோக்கி பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டது யார்? ஏன் இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கான திட்டம் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.