;
Athirady Tamil News

இனி இப்படியும் பயன்படுத்தலாம்.. சாட்ஜிபிடி ஐஒஎஸ் ஆப் அறிமுகம்!!!

0

ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப் வெர்ஷன் சாட் ஹிஸ்ட்ரியை சின்க் செய்து வழங்குகிறது. மேலும் ஒபன் ஏஐ நிறுவனத்தின் ஒபன்-சோர்ஸ் ஸ்பீச் ரெகஃனிஷன் மாடலான (Speech Recognition Model) விஸ்பர் மூலம் ஐஒஎஸ் ஆப் வாய்ஸ் இன்புட் வசதியை வழங்குகிறது. பயனர்கள் வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியிலும் சின்க் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெப் வெர்ஷனில் இருந்த சாட்கள் செயலியிலும் பார்க்க முடியும். சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்கள் ஐஒஎஸ் செயலியில் பிரத்யேக பலன்களை பெற முடியும்.

இதில் ஜிபிடி-4 மேம்பட்ட திறன்கள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, அதிவேகமாக பதில்களை பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சாட்ஜிபிடி செயலி உடனடி தீர்வுகள் மட்டுமின்றி, அறிவுரை, தொழில்முறை கருத்துக்கள் என்று பல்வித கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில் அளிக்கிறது. புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் இந்த செயலி கிடைக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வெளியிடப்பட இருக்கிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியும் விரைவில் வெளியிடப்படும் என்று ஒபன்ஏஐ தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.