;
Athirady Tamil News

அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!!

0

தஞ்சையில் இன்று ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது :- வைத்திலிங்கம், தவமணி இல்ல திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று 7-ம் தேதி. எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தேதியாகும். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்,. அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டுகோப்புடனும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழி நடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர் வழியில் நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா.

பல்வேறு சோதனைகள், சதி வலைகளை உடைத்து மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். அ.தி.மு.க.வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலர செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.