;
Athirady Tamil News

அஜித்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்

0

தவெக தலைவர் விஜய், உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

நேரில் சென்ற விஜய்
அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நேற்று தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதன்படி, நேற்று அஜித்குமாரின் சகோதரருக்கான பனி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். மேலும், அந்த குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த அஜித் குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.