எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு

எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினாா்.