;
Athirady Tamil News

இவரை உங்களுக்குத் தெரியுமா? !!

0

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வயோதிபர் சிங்கள மொழி பேசுபவர் என்பதுடன் தன்னை குணபால மென்டிஸ் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

எனினும் இவர் தொடர்பில் எவ்வித மேலதிக தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வவுனியா போது வைத்தியசாலையின் உளநல சிகிச்சைகள் பிரிவின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவுடனோ அல்லது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி சி. சுதாகரன் தொடலைபேசி இலக்கம் 071 4323585, உளநல பிரிவு 024 2227784, 12 ஆவது விடுதி இலக்கம் 024 2222762, 024 2222262 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.