;
Athirady Tamil News

பிரான்சில் கத்திக்குத்து தாக்குதலால் அதிர்ச்சி !!

0

பிரான்சில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான நான்கு சிறார்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிரிய பூர்வீகத்தைக் கொண்ட 32 வயதுடைய அகதி ஒருவரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இலக்கான சிறார்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதலாளி காவல்துறையினரால் மடக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும் அன்னேசி ஏரிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நேற்றுக் இந்த தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

தம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியமுன்னரே அடுத்தடுத்து நான்கு சிறார்களும் இரண்டு பராயமடைந்தவர்களும் கத்திக் குத்துக்கு இலக்காகியிருந்தனர்.

கடந்த சில நாட்களாக இந்தப் பூங்காவில் அவதானிக்கப்பட்ட சுவிடனில் இருந்து பிரான்சுக்கு அகதியாக நுழைந்த சிரிய நாட்டவரே தாக்குலாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளி பெரும் குரலெடுத்துக் கத்தியபடி சிறார்களை மீண்டும் மீண்டும் குத்தியதாக இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒரு சிறுவனின் தாயும் இன்னொரு முதியவரும் குறித்த நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாக்குலாளியை மடக்கியுள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வான்வழி உட்பட்ட மார்க்கங்களில் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்

தாக்குதலாளி 32 வயதுடைய அப்தல் மாசி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிடனில் இருந்து சட்டப்பூர்வமாக பிரெஞ்சு எல்லைக்குள் நுழைந்த அவர், கடந்த நவம்பரில் தனது புகலிடக் கோரிக்கையை சமர்ப்பித்த நிலையில், கடந்த ஏப்ரலில் அவருக்கு ஸ்வீடனில் அகதி தகுதிநிலை கிட்டியுள்ளது.

குறித்த நபர் சுவிடனில் ஒரு பெண்ணை திருமணம் செய்து மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலையடுத்து அன்னேசி பகுதிக்குச் சென்றுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவும் நிலைமைகளை ஆய்வுசெய்துவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.