;
Athirady Tamil News

ஒலிபரப்பு அதிகார சட்டம் பற்றிப் பயப்பட வேண்டாம்!!

0

உத்தேச ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் ஊடகங்களை நெறிமுறையுடன் கையாளும் என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேர்மறையான ஒரு செய்தியை ஒலிபரப்பும் போது ஊடகங்கள் கவனமாக செயற்பட வேண்டும். “இன்று, ஒரு புதிய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி, குற்றங்கள் மற்றும் சமூகம் பற்றிய முக்கியமில்லாத செய்திகளுக்குப் பின்பு தான் வருகிறது. உலகில் ஊடகங்களின் பயன்பாடு எமது நாட்டிலிருந்து மிகவும் வேறுபட்டது.

ஊடகத்திற்கு நெறிமுறைகள் அவசியமானதாகும். நாடு எவ்வாறு முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமென்பது எமது ஊடகங்களில் சரியான முறையில் கோடிட்டுக் காட்டப்படுவதில்லை.

ஒரு கொலைச் சம்பவம் நடந்தால் அது பெரிய புகைப்படங்களுடன் பதிவேற்றி வெளியிடப்படுகிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் நிரூபிக்கப்பட முன்னதாகவே ஊடகங்கள் புகைப்படங்களை வெளியிட்டு களங்கப்படுத்துகின்றன. ஊடகங்களை சமூக நெறிமுறைகளுடன் பயன்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.