;
Athirady Tamil News

பெருவெள்ளம், உடைந்த அணை… அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை: மிதக்கும் ஒரு நாடு

0

மத்திய கென்யாவின் Mai Mahiu பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர்கள் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அணை ஒன்றும் உடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்
குறித்த சம்பவத்தால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே கன மழை மற்றும் பெருவெள்ளத்தால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 100 கடந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி 76 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் 131,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு கென்யாவின் கரிசா மாவட்டத்தில் உள்ள டானா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் கவிழ்ந்த படகில் இருந்த இரண்டு நபர்களின் உடல்களை மீட்டுள்ளதாக கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை
மட்டுமின்றி, 23 பேர்களை அந்த சம்பவத்தில் இருந்து மீட்டுள்ளதாகவும், 6 பேர்கள் தற்போதும் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தான்சானியா மற்றும் புருண்டி உட்பட பிற கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் கடுமையான மழையால் டசின் கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர் என்றும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் கென்யா முழுவதும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. தலைநகர் நைரோபியில் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சாலை சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும், விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.