;
Athirady Tamil News

வெள்ளைப்பூண்டு மோசடியாளருக்கு புதிய பதவியா?

0

இலங்கை சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்ட சதொச முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் சமில அசுரமன்னவுக்கு மக நெகுமவுடன் இலாபகரமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் எக்சத் ஜனராஜ பெரமுன (EJP) நேற்று (21) குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது எக்சத் ஜனராஜ பெரமுனவின் குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான ராஜிக்க கொடித்துவக்கு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

முறையான ஆய்வு இன்னும் நடத்தப்படாததுடன் வழக்கு இன்னும் நிலுவையிலுள்ள போது சந்தேக நபர் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.