;
Athirady Tamil News

வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவுக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மதிப்பளிப்பு!! (PHOTOS)

0

இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவினை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு இன்று(26) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வாராந்த முதல்நாள் ஒன்றுகூடலைத் தொடர்ந்து இடம்பெற்றது.

இதன்போது குறித்த வீராங்கனைக்கு மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.தொடர்ந்து உதவி மாவட்டச்செயலர் திருமதி.H.சத்தியஜீவிதா அவர்கள் மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் அவர்கள் நினைவுக் கேடயத்தை வழங்கி மதிப்பளித்திருந்தார்.

குறித்த போட்டியில் 12 சர்வதேச நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில், இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெண்கலப் பதக்கத்தினை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.