;
Athirady Tamil News

கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா விதித்துள்ள மற்றுமொரு கோடிக்கணக்கான அபராதம் !!

0

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 2022-ல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஆல்ஃபபெட்’ நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபில்கள் அபராதம் விதித்திருந்தது.

ரஷ்யாவின் பெடரல் ஆன்டிமோனோபோலி சேவீஸ் (FAS) எனும் அமைப்பு கூகுள், யூ-டியூப் காணொளி ஹோஸ்டிங் சேவை சந்தையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அபராத தொகையை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த தவறியதால் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் 4 பில்லியன் ரூபில்கள் அபராதம் விதிக்கப்படுவதாக ரஷ்யாவின் பெடரல் ஆன்டிமோனோபோலி சேவீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் மார்ச் 2022-ல் ரஷ்யாவில் ஒன்லைன் விளம்பரங்களை விற்பனை செய்வதை கூகுள் நிறுத்தியது. ஆனால் சில இலவச சேவைகளை மட்டும் கிடைக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.