;
Athirady Tamil News

விமான விபத்தில் NASCAR ஜாம்பவான் குடும்பத்துடன் மரணம்; சம்பவத்தால் அதிர்ச்சி

0

அமெரிக்க பிரபல கார் பந்தய ஓட்டுநர் நாஸ்கார் சாரதி கிரெக் பிஃபிள் (Gregory Jack Biffle)மற்றும் அவரது குடும்பத்தினர் North Carolina இல் ஒரு தனியார் பயணிகள் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்தத் துயரச் சம்பவம் நடந்தபோது, ​​கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிறிஸ்டினா க்ரோசு, மகள் எம்மா மற்றும் அவர்களது மகன் ரைடர் ஆகியோர் அந்த பயணிகள் விமானத்தில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிஃபிள் குடும்ப நண்பரான கிளீட்டஸ் மெக்ஃபார்லேண்டின் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அந்த விபத்தில் நால்வருமே சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளனர் என்றே தெரிய வருகிறது.

இந்நிலையில் NASCAR ஜாம்பவான் மரணம் ரசிகர்களை துயரத்தில் தள்ளியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.