மது போதையில் மிதந்த சாரதியால் நேர்ந்த அனர்த்தம் ; நால்வர் படுகாயம்
மெய்யன் பன்விலை நகரில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர்.
பன்விலை மணிக்கூட்டு சந்தியில் பிட்டகந்தை நோக்கி திருப்ப முனைந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமாக மொத்தம் நால்வர் காயமடைந்ததாகவும்.
மேலதிக விசாரணை
மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்த வர்கள் நால்வரும் மக்கானிகமை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பன்விலை பொலிஸார் தெரிவித்தனர்