தமிழர் பகுதி இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; சட்டவிரோத செயலால் துயரம்
அம்பாறையில் தெஹியத்தகண்டிய – உத்தலபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.