;
Athirady Tamil News

விபத்தில் சிக்குண்டு விஜயகலா படுகாயம்!!

0

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (29) அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றதாகவும் அவர்கள் பயணித்த வான், வேகக் கட்டுப்பாட்டை இழந்து,
மரமொன்றுடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா மகேஸ்வரன், புத்தளம் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வருவதுடன்,
படுகாயமடைந்த சாரதி உட்பட ஏனைய மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.