;
Athirady Tamil News

கலை அறிவியல் கல்லூரிகளில் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பின: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கட்கிழமை வகுப்பு தொடக்கம்!!

0

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இக்கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு ஆன் லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு 2 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். மொத்தம் 84,899 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

36,626 மாணவர்களும், 48,275 மாணவிகளும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரையில் சேர்த்துள்ளனர். ஒரு சில கல்லூரிகளில் இன்னும் சில முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பாமல் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் நேரடி மாணவர் சேர்க்கை 7-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இனஒதுக்கீடு அடிப் படையில் மாணவர்களுக்கு காலி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கிடையில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு தொடங்குவதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்திலேயே கல்லூரி தொடங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருட மாக தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் பழையப் படி கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் உயர் கல்வியை தொடரப்போகும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் மாநில கல்லூரி, நந்தனம், வியாசர்பாடி, ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரிகள், பச்சையப்பா, லயோலா, சென்னை கிறிஸ்தவ கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரி, எத்திராஜ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, வைஷ்ணவ கல்லூரி, அண்ணா ஆதர்ஸ், பாரதி, ராணிமேரி மகளிர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன. காலை வகுப்புகள் தவிர மாலை நேர வகுப்புகளும் நடைபெறுவதால் பஸ், ரெயில்களில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.