;
Athirady Tamil News

உத்தர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி கன்வார் யாத்ரீகர்கள் 5 பேர் பலி!!

0

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கன்வார் யாத்திரை பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

ஹரித்வாரில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துகொண்டு புறப்பட்ட பக்தர்கள் நேற்று இரவு மீரட் மாவட்டம் ராலி சவுகான் கிராமத்தில் வந்தபோது அவர்களின் வாகனம் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளானதும் வாகனம் தாறுமாறாக ஓடி பக்தர்கள் மீதும் மோதியது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலல் ஈடுபட்டனர். கன்வார் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

கன்வார் யாத்ரா: கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிகப்பெரிய யாத்திரையாகும். உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சிவ பக்தர்கள் இதில் பங்கேற்கிறார்கள். கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படும் இந்த யாத்ரீகர்கள், காவடி ஏந்தி ஹரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமித்து, அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிசேகம் செய்வார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.