;
Athirady Tamil News

கார் ‘பார்க்கிங்’ தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கம்பால் தாக்கிய முதியவர்- வீடியோ வைரலானதால் கைது!!

0

டெல்லியின் சாந்தநகர் பகுதியை சேர்ந்த முதியவர் தல்ஜீத் சிங். இவரும் இவரது மகன் ஹர்ஜப் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரரான துஷ்யந்த்கோயல் என்பவரை கம்பால் தாக்கிய வீடியோ டுவிட்டரில் வெளியானது. அதில் கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக தல்ஜீத்சிங் குடும்பத்தினர், துஷ்யந்கோயலுடன் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் உள்ளது.

அப்போது தல்ஜீத்சிங் மற்றும் ஹர்ஜப் உள்ளிட்டோர் கம்பால் துஷ்யந்த்கோயலை தாக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் பரவியதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தல்ஜீத் சிங் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.