;
Athirady Tamil News

மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்!!

0

மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு இஉணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மாண்பு மிகு மலையக மக்கள் எழுச்சிப் பயணத்தின் யாழ்ப்பாணப் பேரணி இன்று வியாழக்கிழமை யாழ் நகரில் (03.08.2023) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயேஇவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்காக முதுகெழும்பாக உழைத்துள்ளனர். ஆனால் இந் நாட்டில் அதிகம் அரசியல் சமூக பொருளாதார கலாச்சார உரிமைகள் விடயத்தில் மறுக்கப்படும் ஓர் தரப்பாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலத்திற்காகப் போராடுகின்றனர். ஒரு துண்டு நிலத்தினை பகிர்ந்தளிப்பதற்கு மாறிமாறி ஆட்சிக்கு வந்த தரப்புக்கள் ஏமாற்றியே வருகின்றன. அதுபோல் அவர்களுடைய ஊதியம் தொடர்பான பிரச்சினை தொடர் ஏமாற்றத்திற்குரிய ஒன்றாகவுள்ளது. உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் குறைந்தபட்ச பொதுநலப் பண்டங்களைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட ஏங்கவேண்டியுள்ளது. போராடவேண்டியுள்ளது. பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களது உரிமைகள் நிலைநிறுத்தப்படாமல் உழைக்கும் மக்களது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், தொழில் பாதுகாப்பு என அத்தனையும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே மலையக மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதையிட்டு நாடே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பத்து அடி லயன் அறைகளில் குடும்பமாக வாழ முடியாது இன்றும் திண்டாடுகின்றனர். சாதாரணமாக தோட்டங்களில் தாய் மார் பிரசவத்திற்குச் செல்வதற்கே கிராமத்தில் வீதிகள் இல்லை. உண்மையில் மலையக மக்கள் மீது பிரயோகிக்கப்படும் சுரண்டல்கள் போன்று பொருளாதாரச் சுரண்டல் நிலைமையினை இலங்கையில் வேறு எந்தச் சமூகங்களும் எதிர்கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையினைச் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். நாங்கள் அவர்களது துன்ப துயரங்களை நேரில் பார்க்கின்றோம்.

இந் நிலையில் மலையக மக்கள் தொடர்பாக விட்டுக்கொடுப்பின்றி செயற்படவேண்டிய பொறுப்பு வடக்குக் கிழக்கில் எமக்கு உள்ளது.
இச் சுரண்டலின் மலையக பிள்ளைகள் கொழும்பிலும் நாட்டின் பிறபாகங்களுக்கும் வீட்டுப்பணிப்பெண்களாகவும் இளைஞர்கள் பலர் கடைகளுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதேவேளை மலையகத்தில் இவ்வாறாக ஒடுக்குமுறை நிலவும் போதும் அதையும் மீறி பல்துறைகளிலும் இளைய தலைமுறையொன்று முன்னேற்றம் கண்டு வருகின்றது. இப் பெருமையினையும் நாம் கொண்டாடுகின்றோம். வ்வாறு தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.