;
Athirady Tamil News

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னாள் பிரதி அதிபர் செல்லத்துரை குமாரசாமி காலமானார்!!

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னாள் பிரதி அதிபர் சங்கீத பூஷணம் செல்லத்துரை குமாரசாமி (SLEAS) (வயது 73) இன்று 16.08.2023 புதன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
10.01.1951 இல் பிறந்த இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசை துறை பட்டதாரி ஆவார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இசைத் துறை விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் சேவையாற்றினார்.

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது என்ற எங்கள் மண்ணின் திரைப்படப் பாடல் இவர் பாடிய பிரபல பாடல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.