;
Athirady Tamil News

அதிபயங்கரமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில்: அதிர்ச்சியில் உலகநாடுகள் !!

0

ரஷ்யாவின் ‘மிகப்பயங்கரமான’ ஏவுகணை என்று கருதப்படும் சா்மாட் ரக ஏவுகணைகளை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது மோத வேண்டும் என்று எந்தவொரு நாடு நினைத்தாலும் அவர்களை ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கக்க வைக்கும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் ஆல் வருணிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சா்மாட் ரக ஏவுகணைகளானது பயன்பாட்டுக்கு தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என்று ரஷ்யாவின் ராஸ்காஸ்மாஸ் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் யூரி போரிசொவ் கூறியுள்ளார்.

அதி பயங்கராமான ஆயுதங்களை, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரஷ்யா உருவாக்கி வருவதாக அதிபர் புடின் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன் பட்டியலில் இந்த சா்மாட் ஏவுகணையும் அடங்குகின்றது, இதனை “சாத்தான்” என்று நோட்டோ அமைப்பு குறிப்பிடுகின்றது.

இந்த ஏவுகணையினை பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளைத் தாக்கி அழிக்க முடியும், அதற்கு ஏற்றாற்போல ஏராளமான வெடிபொருட்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சா்மாட் ஏவுகணைகள் மிகக் குறைந்த உந்துதல் கட்டத்தைக் கொண்டிருப்பதனால், இது ஏவப்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து இடைமறித்து அழிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

அதுமாத்திரமல்லாமல், தற்போது பயன்பாட்டிலுள்ள எந்தவொரு வான்பாதுகாப்பு ஏவுகணைகளாலும் சா்மாட் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்றும் ரஷ்யா மார்தட்டி கூறுகிறது.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிராக மேலைத்தேய நாடுகள் இராணுவ ரீதியில் தலையிட்டால் அவர்கள் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் அதிபா் புடின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், சா்மாட் ஏவுகணைகளை ரஷ்ய இராணுவப் படையில் இணைக்கின்ற அறிவிப்பானது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.