;
Athirady Tamil News

மும்பை ரெயிலில் சண்டை போட்ட பயணிகள்!!

0

டெல்லி மெட்ரோவில் பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம், மோதல் நடைபெற்ற வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது மும்பையில் பாசஞ்சர் ரெயிலில் பயணிகள் 2 பேருக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்த வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஒரு பெட்டிக்குள் 2 ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும், சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்குவது போன்றும் வீடியோ காட்சிகள் உள்ளன.

மேலும் சக பயணிகள் இந்த மோதலை தடுத்து இருவரையும் சமாதானபடுத்துவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், இது தினசரி நடைபெறக்கூடியது தான் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.