;
Athirady Tamil News

வவுனியாவில் டிப்பர் – முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி..!

0

வவுனியா, சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இன்று (12.08) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபுலவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக வவுனியா, உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.