சீனாவில் குற்றக் கும்பல்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கை
சீனாவில் நாடு தழுவிய அளவில் காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 1,000-க்கும் மேற்பட்ட குற்றக் கும்பல்கள் ஒழிக்கப்பட்டு, 8,200-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் இணையம் வாயிலாக நடைபெறும் புதிய வகையிலான திட்டமிட்ட குற்றங்கள் அதிக அளவில் தலைதூக்கின.
இதையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்மூலம் நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சீன பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.