;
Athirady Tamil News

கலிபோர்னியா நெடுஞ்சாலைக்கு அமெரிக்கவாழ் இந்திய போலீஸ்காரர் பெயர்!!

0

அமெரிக்காவின் பிஜி தீவு பகுதியில் வசித்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர் ரோனில் சிங்கை சுட்டுக்கொன்றார். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாலோ விர்ஜென் மெண்டோசா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரோனில் சிங்கை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘நாட்டின் கதாநாயகன்’ என அழைத்து பெருமைப்படுத்தினார்.

மேலும் ரோனில் சிங்கை கவுரவிக்கும் வகையில் கஸ்டானிஸ்லாஸ், மெர்சிட் ஆகிய நகரங்களில் உள்ள சாலைக்கு அவரது பெயரை வைக்க 2019-ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது கலிபோர்னியாவின் நியூமேனில் உள்ள நெடுஞ்சாலைக்கு ‘கார்ப்ரல் ரோனில் சிங் நினைவு நெடுஞ்சாலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.