;
Athirady Tamil News

உமா ஓயா திட்டத்தில் நாட்டிற்கு கிடைக்கவுள்ள பாரிய வருமானம்

0

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.

உமாஓயா திட்டத்தினால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த திட்டம் சுமார் ஒருமாத காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesingh) மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi ) ஆகியோரின் தலைமையில் குறித்த திட்டம் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
2007 நவம்பர் 27ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2008 ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.