;
Athirady Tamil News

எந்தவொரு மாநாட்டையும் நடத்த இந்தியா தயார்: ஜி20 சிறப்பு செயலாளர்!!

0

டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பாரத் மண்படத்தில் ஜி20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கான அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு, இந்தியா எந்தவொரு மாநாட்டையும் நடத்த தயார் என்பதை சொல்லும் என ஜி20 மாநாட்டிற்கான சிறப்பு செயலாளர் முகேஷ் பர்டேஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகேஷ் பார்டேஷி கூறுகையில் ”நாங்கள் கடந்த ஒரு மாதமாக இதற்கான வேலைகளை செய்து வருகிறோம். ஜி20 மாநாட்டையடுத்து, நம்மால் எந்தவொரு மாநாட்டையும் நடத்த முடியும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியும்.

இந்த மாநாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள முடியும். கலந்து கொள்ளும் நபர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படடுள்ளனர். விவிஐபி, குழுவிற்கான தலைவர்கள், மந்திரிகள் என கலந்து கொள்பவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். மீடியாவைச் சேர்ந்த 2500 முதல் 3000 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இன்னும் சில மணி நேரங்களில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இன்று மாநில தலைவர்கள் வருகை தருவார்கள்.

ஏராளமான தலைவர்கள், பிரதம மந்திரிகள், மந்திரிகள் வந்துள்ளனர். இன்று இரவுக்குள் அனைவரும் வந்து சேர்வார்கள். நாளை முக்கியமான நாள். தலைவர்களை வரவேற்கு முக்கியமான நாள். அதன்பின் தொடக்க செசன் மதிய உணவு இடைவேளை வரை நடைபெறும். பிரதமர் மந்திரி தொடங்கி வைப்பார். உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது ஓய்வு நேரம் கிடைக்கும். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் தலைவர்கள் ஈடுபடுவார்கள். 2-வது செசன் மாலை வரை நடைபறும். ஜனாதிபதி விருந்தின்போது கலாசார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.