;
Athirady Tamil News

System change; இலங்கை பொது சேவை உத்தியோகத்தர்களின் சொத்துக்கள் தொடர்பாக பேசுவதில்லை?…!!

0

System change பற்றிப் பேசுபவர்கள் இலங்கை பொது சேவை உத்தியோகத்தர்களின் சொத்துக்கள் தொடர்பாக பேசுவதில்லை.

குறிப்பாக SLAS,SLEAS,SLPS போன்ற சேவைகள் அதிகாரம் நிறைந்த சேவைகளாக இருப்பினும் அவற்றிற்கான சம்பளம் என்பது மருத்துவர்களுடன் ஒப்பிடும் அளவு அதிகப்படியானது இல்லை.

எனினும் மட்டுப்படுத்தப்பட்ட சம்பளம் அதிகாரிகளாக காணப்பட்டிருந்த போதிலும் இவர்கள் பதவிக்கு வந்து சில காலங்களிலே அரசியல்வாதிகளின் கைப்பிள்ளையாக மாறி சொத்து குவிப்பு விடயங்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இருப்பினும் நேர்மையாக தமது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளும் இருக்க தான் செய்கின்றனர்.

ஆகவே இவ்வாறான மோசடிகள் அறிக்கையிடப்படும் வரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையிடுவதும் இல்லை. ஆகவே சில அதிகாரிகளும் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன நிலை காணப்படுகிறது.

எனவே அரச உத்தியோகத்தர்களை கண்காணிப்பதற்கான தனியான புலனாய்வு கட்டமைப்பு உருவாக்கம் பெற வேண்டியதன் அவசியம் காணப்படுகிறது.

வெறுமனே அரசியல்வாதிகளை குறைகூறிக்கொண்டு இருக்காமல் அரச துறைகளில் கணக்கு வராத வருமானங்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் புலனாய்வு கட்டமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் புலனாய்வு அமைப்புக்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துவதனால் சட்டத்திற்கு புறம்பாக வருமானம் ஈட்டும் அதிகாரிகள் தொடர்பாக கவனம் செலுத்த முடியாமல் உள்ளதும் பிரதான காரணமாகும்.

எனவே systems change என்பது சட்டத்திற்கு முரணாக சொத்து குவிப்பதில் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.