;
Athirady Tamil News

கடற்கரையை தூய்மைபடுத்திய முத்துரத்தின அரங்கம் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள்!!

0

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதுபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி தூய்மை பணியும் நடத்தப்பட்டு வருகிறது. தூய்மை பணியின் 12-வது வாரமாகவும் என்.எஸ்.எஸ். முகாமின் 4-ம் நாளாக இன்று காலை புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகிலும் மற்றும் கடற்கரை பகுதியிலும் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் அவர்கள் கலந்துகொண்டு நாட்டு நலப்படுத்திட்ட மாணவர்களை ஊக்கப்படு த்தினார். இதில் 2 டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் மேலும் மரக்கட்டைகள் போன்றவற்றை நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் அகற்றினர். புதுச்சேரி நகராட்சி அதிகாரி துளசிராமனிடம் சேகரித்த குப்பைகளை நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் ஒப்படைத்தனர்.

இந்தத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளிடமும் பார்வையாளர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் துணை முதல்வர் வினோலியா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.