;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் பெரும் போருக்கு தயாராகும் சீனா !!

0

அமெரிக்காவை வீழ்த்துவதற்காக சீனா போருக்கு தயாராகி வருவதாக குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவை தோற்கடிக்க வலிமையும் மற்றும் பெருமையும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்காவை வீழ்த்துவதற்கு, சீனா சதி செய்து வரும் நிலையில் அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களை சீனா கண்டறிந்துள்ளதாகவும் மிகவும் பின் தங்கிய நாடாக இருந்த சீனா தற்போது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா மாறி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சீனா அமெரிக்காவை அச்சுறுத்தவும், ஆசியாவை தாண்டி ஆதிக்கம் செலுத்தும் வகையில் இராணுவத்தை தயார் வருகிறது என்றார்.

அதேவேளை அமெரிக்க இராணுவத்திற்கு இணையாக தனது இராணுவத்தை அந்நாடு மேம்படுத்தி உள்ளதுடன், சீனா பெரும் போருக்கு தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.